இந்தியாவுக்கு விமானசேவை விரிவாக்கம்! கத்தார் ஏர்வேஸ் தீர்மானம்!!

0
0

தோகா: இந்தியாவுக்கு விமான சேவையை விரிவாக்க கத்தார் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அக்பர் அல் பக்கீர் தெரிவித்துள்ளார்.
தோகா-மாஸ்கோ நகரங்களுக்கு இடையே புதிய விமானசேவையை அவர் துவக்கிவைத்தார்.


நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நான் இந்தியாவில் படித்தேன். அந்நாட்டைப்பற்றிய எனது நினைவுகள் இன்னமும் பசுமையாக உள்ளன.
இந்தியாவில் விமான போக்குவரத்து துறை வளர்ச்சி அடைந்துவருகிறது. அதனைகருத்தில் கொண்டு அந்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவை விரிவாக்கப்படும்.


இரு நாடுகளுக்கும் இடையேயான பயண நேரத்தை குறைக்கவும் திட்டமிட்டுவருகிறோம்.
தற்போது கத்தாரில் இருந்து 150நகரங்களுக்கு நேரடி விமானசேவை அளிக்கப்பட்டு வருகிறது.


2022 சர்வதேச கால்பந்து போட்டிகளை ஸ்பான்சர் செய்துவருகிறோம். அதனை முன்னிட்டு புதிய நகரங்களுக்கு விமான சேவை விரிவாக்கப்படும்.
வளைகுடா நாடுகள் தடையால் கத்தார் விமானசேவை பாதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், நிலைமையை வெற்றிகரமாக சமாளித்து வருகிறோம். இவ்வாறு அக்பர் அல் பக்கீர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here