புதுவை அதிமுகவும் 3ஆனது!

புதுச்சேரி அதிமுக மூன்றாக பிளவு பட்டுவிட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக இரு அணிகளாக செயல்பட தொடங்கியது.

அ.தி.மு.க. அம்மா அணியில் மாநில செயலாளர் புருஷோத்தமன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் இருந்து வந்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் புரட்சி தலைவி அம்மா அணி செயல்பட்டு வருகிறது.

சசிகலா தரப்பு அணியான அதிமுக அம்மா அணி தற்போது மேலும் ஒரு பிளவை சந்தித்துள்ளது.

மாநில செயலாளர் புருஷோத்தமன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தீவிரமாக ஆதரித்து வருகிறார்.

தினகரனுக்கு எதிர்ப்பாக அதிமுகவில் கிளம்பியுள்ள மூன்றாவது அணியாக முதல்வர் எடப்பாடி அணி உள்ளது.

எடப்பாடி அணிக்கு புருஷோத்தமன் ஆதரவு அளித்துள்ளார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், அசனா தங்களது ஆதரவு யாருக்கு என்பது குறித்து மவுனமாக உள்ளனர்.

About the author

Related

JOIN THE DISCUSSION