வடகொரிய அதிபருக்கு பிடித்த ஒரே வார்த்தை….??

கிம் ஜாங் உன், வடகொரிய அதிபர். கடந்த வாரம் அவர் அதிகம் உச்சரித்த வார்த்தை என்ன தெரியுமா..? எல்லோரும் நினைப்பதை போல அணு ஆயுதம் அல்ல.

அவர் பயன்படுத்திய வார்த்தை பொருளாதாரம். அந்த வார்த்தையை அவர் பயன்படுத்தியதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆமாம். வடகொரிய அதிபர், என்ன தான் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையாக இருக்கிறது என்று கூறிக்கொண்டாலும், மக்களின் வாங்கும் சக்தி  குறைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

எரிபொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதாகவும், அதனால் நிலையற்ற விலையில் விற்கப்படுவதாகவும், அதனால் எரி பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிகிறது.

ஒருவேளை பொருளாதார சீரழிவு ஏற்பட்டால் அதிபர் கிம் ஜாங் உன்-ன் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகலாம். அதனால், அந்த நிலை வரக்கூடாது என்பதால் அவர் பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

கிம்மின் திட்டப்படி, நாட்டின் பொருளாதாரத்தையும், பாதுகாப்புத்திறனையும் எப்படி ஒருங்கிணைத்து மேம்படுத்துவது என்பதில் அதிக கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் சீனா, பொருளாதார நடவடிக்கைகளில் பெரிதும் உதவியது. ஆனால், ஐ.நா.,வின் பொருளாதார நடவடிக்கைக்குப் பின்னர் சீனாவும் பின் வங்கத் தொடங்கியுள்ளது.

அதனால், கிம் பொருளாதாரத்தை சீர் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சதாம் உசேன், கடாபி போன்றவர்களின் சாம்ராஜ்யம் வீழ்ந்ததைப் போல தனது சாம்ராஜ்யம் வீழ்ந்து விடக் கூடாது என்பதாலேயே அணு ஆயுதங்களை பெரிதும் நம்பினார்.

நாட்டின் மேல்மட்ட மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்றால் பொருளாதாரம் கை கொடுக்க வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து வைத்துள்ளார்.

அதனால், இப்போதைக்கு அவர் செய்யப் போவதெல்லாம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள் மட்டுமே. அதனால், உலகப் போர் வரப் போகிறது, அணு ஆயுதங்களை வீசப்போகிறது என்று அச்சம் தெரிவித்த நாடுகள் எல்லாம் இப்போது அமைதி அடைந்துள்ளன.

 

ஏனென்றால், வடகொரியா போர் அறிவிக்கும் சூழலில் இல்லை என்பதே.

Related Topics : International News

 

About the author

Related

JOIN THE DISCUSSION