ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மீராகுமார்

0
1

நாட்டின் 14வது குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுக்க  தேர்தல் ஜூலை 17ல் நடைபெறவுள்ளது.

பாஜக கூட்டணி சார்பில் ராம்நாத்கோவிந்த் வேட்பாளராக்கப்பட்டுள்ளார்.அவருக்கு ஆதரவு அளிக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், பல கட்சிகள் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்தனர்.

மத்திய அரசு தலித் போர்வையில் நாடகமாடுகிறது என குற்றம்சாட்டினர்.இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் தரப்பில் இருந்து யாரை நிறுத்துவது என்று ஆலோசனை நடத்தினர்.

மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார், அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கார், காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ணகாந்தி  ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவரும், பாபு ஜெகஜீவன்ராம் மகளுமான மீராகுமாரை பெரும்பான்மையான கட்சித்தலைவர்கள் ஆதரித்தனர்.

இறுதியில் பெண் வேட்பாளர் பொறுத்தமானவர் என மீராகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here