தேங்காயில் ரத்த வகை..! புதியமுறை விடியோ..!

0
2

சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரில் வசித்து வருபவர் பி.டி.குஹா. இவர் மாநில வேளாண்மைத் துறையில் வேலை செய்து வருகிறார்.

இவர் ஒரு அபூர்வ முறையில் மனிதர்களின் ரத்த வகையை கண்டு பிடிக்கிறார். ஒரு தேங்காய் மூலம் அவர் அதை சரியாக கண்டு பிடித்து சொல்கிறார்.

பலரது ரத்த வகையை அவர் கூறியதற்கு பின்னர் ஆய்வகத்தில் பரிசோதனை செய்தபோது அது சரியாக இருந்தது. தேங்காயை கையில் வைத்து நிலத்தடி நீர் எங்கு அதிகமாக இருக்கிறது என்று கண்டு பிடித்து அந்த இடத்தில் போர் போடுவார்கள்.

குஹா, தேங்காயை  தலைக்கு மேல் வைத்து ரத்த வகையை கண்டுபிடிப்பது புதுமையாக இருக்கிறது என்று அப்பகுதியில் பலர் வந்து அவரிடம் ரத்த வகையை தெரிந்து செல்கின்றனர்.

ஆனால்,டாக்டர் தர்ஷன் ஜெயின் அதை மறுக்கிறார். அது சரியான முறை அல்ல. அறிவியல் பூர்வமற்றது. ஆபத்தை விளைவிக்கும் முறை என்று எச்சரிக்கிறார்.

குஹா 2005ம் ஆண்டில் இருந்து இந்த டெக்னிக்கை பயன்படுத்தி ஐந்து வகை ரத்த வகைகளை கண்டு பிடிக்கிறார். தேங்காய் கையில்  இருந்து எந்த திசை நோக்கி நகர்கிறதோ அதை வைத்து ரத்த வகையை கணித்து கூறுகிறார்.

 

அதற்கு உரிய அங்கீகாரம் கேட்டு மாநில அரசுக்கு விண்ணப்பித்துள்ளார்.

 

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here