பரீட்சையை ஒத்திவைக்க 2ம் வகுப்பு மாணவன் கொலை!

0
0

ஹரியானா: பரீட்சையை ஒத்திவைக்க நினைத்த 11ம் வகுப்பு மாணவன் 2ம் வகுப்பு மாணவனை கொன்றுள்ளான்.

கடந்த செப்டம்பர் 8ம் தேதி டெல்லியில் உள்ள ரியான் பள்ளியில், கழிவறையில் 2ம் வகுப்பு மாணவன் ப்ரதியுமன் மர்மமாக இறந்து கிடந்தான்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். பள்ளியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அவர்கள் பார்த்து பள்ளி வேன் டிரைவரை அவர்கள் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடந்துவரும் வேளையில், ப்ரதியுமனின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். சிபிஐ இவ்வழக்கை விசாரிக்க தொடங்கியது.

சிபிஐ போலீசாரும் பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தனர். ஆனால் அவர்களிடம் உண்மையான தடயம் சிக்கியது.

ப்ரதியுமன் கழிவறை பகுதிக்கு  சென்ற சில நிமிடங்களில் பதட்டத்துடன் ஒரு மாணவர் கழிவறை செல்வதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அம்மாணவன் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

11ம் வகுப்பு மாணவன் கடைசியில் உண்மையை ஒப்புக்கொண்டான். கடந்த 8ம் தேதி போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டனர். பெற்றோர் முன்னிலையில் தனது தவறை அம்மாணவன் ஒப்புக்கொண்டார்.

பள்ளியில் நடக்க இருந்த பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற கூடாது என்றும், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றும் அம்மாணவர் விரும்பியுள்ளார்.

அதனால் ப்ரதியுமன் தனியாக கழிவறை செல்வதை பார்த்ததும் அவனை தீர்த்துக்கட்ட முடிவெடுத்து கழிவறைக்குள் சென்றான். ப்ரதியுமனை கத்தியால் கழுத்தில் அறுத்து கொன்றபின்னர்  அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளான்.

அம்மாணவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிஐ அதிகாரிகள் தங்கள் கஸ்டடியில் விசாரணையை தொடரவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here