மனைவியுடன் தனிமையில் இருந்ததை இணையத்தில் வெளியிட்டவர் கைது

0
0

மனைவியுடன் தனிமையில் இருந்ததை இணையத்தில் லைவ்வாக வெளியிட்ட இன்ஜினியர் கைது செய்யப்பட்டார்.

கேரளாவை சேர்ந்த பெண் இன்ஜினியர் தனது தோழி உடலுறவு கொள்ளும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக ஹைதராபாத்தில் வசித்துவரும் தோழியை எச்சரித்தார்.
ஹைதராபாத்தை சேர்ந்த அவரது தோழியும், அவரது கணவரும் முன்னணி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றுபவர்கள்.

இதுதொடர்பாக அப்பெண், ஹைதரபாத் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.
அவர்கள் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து அந்த விடியோக்கள் பல வெப்சைட்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.

அந்நபரை கைதுசெய்து விசாரித்ததில், அவர் லைவ் ஸ்ட்ரீமிங்காக, இணையத்தளம் ஒன்றில் வெளியான விடியோவை தான் காப்பி செய்து பல இணையதளங்களில் பதிவிட்டதாக தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து லைவ் ஸ்ட்ரீமிங்காக வெளியிட்ட இணையதளத்தை போலீசார் கண்காணித்தனர்.
அதில் பெண் இன்ஜினியரின் கணவரும் உறுப்பினராக இருந்தார்.
அவர், மனைவியுடன் தனிமையில் இருக்கும் காட்சிகளை லைவ் ஸ்ட்ரீமிங்காக வெளியிட்டுள்ளார் என்று தெரியவந்தது.
இக்காட்சியை பார்ப்பதற்காக அவர் பலரிடம் இணையம் வழியே பணம் வசூலித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவரது சமூகவலைத்தள தொடர்புகளை கடந்த இரு மாதங்களாக ரகசியமாக போலீசார் கண்காணித்தனர்.
அவர் ஹைதராபாத் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தன்னை ஒரு விபச்சார புரோக்கராகவும் இணையதளத்தில் அவர் பதிவுசெய்து வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here