கின்னஸ் சாதனை முயற்சியில் அரசு பள்ளி மாணவிகள்…!

புதுச்சேரி அரசு பள்ளி மாணவிகள் புதிய கின்னஸ் சாதனை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

புதுச்சேரி கல்மண்டபத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியை சேர்ந்த 14 மாணவிகள் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.

இந்த 14 மாணவிகளும் ஒரே நேரத்தில், ஒரு நிமிடத்தில் 36௦ முறை கயிற்றை தாண்டி கின்னஸில் இடம் பிடிக்கும் முயற்சியை செய்தனர்.

இந்த நிகழ்வு அனைவரும் வியக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த சாதனை நிகழ்வை பள்ளி நிர்வாகம் பதிவு செய்து, கின்னஸ் அமைப்பிற்கு அனுப்பி வைத்தது.

இது குறித்து சாதனையில் பங்கேற்ற மாணவிகள் கூறுகையில்;
இந்த சாதனை நிகழ்வு எங்களின் 3 மாத கடின உழைப்பில் உருவானது.
புதிய வகையான இந்த முயற்சியை, சாதனையை கின்னஸ் அமைப்பு அங்கீகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும் இது போன்ற பயிற்சிகள் செய்வதால் உடல் ஆரோக்கியமும்,படிப்பில் நல்ல கவனமும் ஏற்படுகிறது என்றும் அவர்கள் கூறினார்கள்.

About the author

Related

JOIN THE DISCUSSION