அரசியல்வாதிகள் பள்ளிக்கூடம் போங்க..! நோபல் பரிசு சத்தியாத்திரி அதிரடி..!

பள்ளிகளில் குழந்தைகளின் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவது பள்ளிகளின் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

பள்ளிகளில் குழந்தைகளுக்கான பாதுகாப்பின்மை குறித்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியாத்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது,

‘அரசியல்வாதிகள் சராசரி பெற்றோராக மாற வேண்டும். அப்படி மாறினால்தான் குழந்தைகளின் கஷ்டங்கள் அவர்களுக்கு தெரிய வரும்.
அவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை.
பாதுகாப்பு குறைபாடுகளே, பள்ளிவளாகத்தினுள் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்.

நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் சாதாரண பெற்றோராக பள்ளிகளுக்கு சென்று பார்க்க வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள சூழ்நிலைகளை நேரில் சென்று தெரிந்துகொள்ள வேண்டும்.

குறைபாடுகள் தென்பட்டால் பள்ளி அது குறித்து கேள்வி எழுப்ப
வேண்டும். பள்ளிகள் கல்வி கற்றுக்கொடுக்கும் நிறுவனங்களாகவும், குழந்தைகளுக்கு ஒரு புகலிடமாகவும் இருக்க வேண்டும். ஆனால்,குழந்தைகளின் சித்திரவதை கூடமாக, பள்ளிக்கூடம் இருக்கக்கூடாது.

நாம் உடனடியாக விழித்துக்கொண்டு குழந்தைகளின் பாதுகாப்புக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தாத வரை, நம் குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுகொண்டு தான் இருப்பார்கள்.

இல்லையெனில், நம் நாட்டை குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம் என்று நாம் சொல்ல முடியாமல் தோற்றுபோவோம்.’ என்றார்.

Related Topics : National News

 

About the author

Related

JOIN THE DISCUSSION