அரசியல் சேர்த்துவைத்த அசைக்கமுடியாத நட்பு!

0
0

நண்பர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

கர்நாடக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்தவர்கள் ஜனார்த்தன ரெட்டி மற்றும் சகோதரர்கள்.

அவர்கள் மைத்துனர் ஸ்ரீராமுலுவும் பெல்லாரி மாவட்ட அரசியலில் கோலோச்சி வருபவர்.

ஜனார்த்தன ரெட்டி, நண்பர்கள் தினத்தன்று முகநூலில் ஸ்ரீராமுலுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசியல்தான் இந்த நட்பை இணைத்துள்ளது என்றபோதும் அதனை மீறிய அன்பு வாழ்த்து செய்தியில் இடம்பெற்றுள்ளது.

சித்தூரில் பிறந்த ஜனார்த்தன ரெட்டி பெல்லாரிக்கு குடியேறினார்.

தனது நண்பர்களுடன் சேர்ந்து நிதி நிறுவனம் நடத்திவந்தார்.

அந்நிறுவனம் கடனில் மூழ்கி தத்தளித்தபோது காப்பாற்றியவர் ஸ்ரீராமுலு.

அதற்கு நன்றிக்கடனாக சுரங்கத்தொழிலில் ஜனார்த்தன ரெட்டி ஈடுபட்ட போது ஸ்ரீராமுலுவையும் சேர்த்தே வளர்த்தெடுத்தார்.

ஜனார்த்தன ரெட்டியை அமைச்சரவையில் இருந்து நீக்கியதற்காக தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார் ஸ்ரீராமுலு.

ஸ்ரீராமுலு துவக்கிய தனிக்கட்சி பெல்லாரி உள்ளிட்ட 4மாவட்டங்களில் பாஜகவின் வெற்றியை பாதித்தது.

ஆபத்துக்கு உதவுபவனே உண்மை நண்பன் என்று ஸ்ரீராமுலுவை ஜனா புகழ்ந்திருப்பது அரசியல் சதிவலைகளை இருவரும் சேர்ந்து அறுத்தெறிந்ததை குறிப்பிடுகிறது.

ஆறடி சிங்கம் என்று வர்ணிக்கப்பட்டுள்ள ஸ்ரீராமுலு பெல்லாரி அரசியலிலும், பாஜகவிலும் தற்போதும் சிங்கமாகவே உள்ளார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here