400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டைத் தூக்கி ‘பாகுபலி’ ஆன போலீஸ்காரர்..!

0
0

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களை காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தூக்கி கொண்டு ஓடிய துணிச்சலான போலீஸ்காரருக்கு முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் ரூ.50,000 பரிசு அறிவித்து கவுரவித்திருக்கிறார்.

மத்தியப்பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதோரா கிராமத்தில் உள்ள பள்ளியில் 400-க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.அந்த பள்ளி வளாகத்தில் வெடி குண்டு இருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அந்த போனில் பேசிய பள்ளி நிர்வாகத்தினர், ‘பள்ளி மைதானம் அருகில் வெடிகுண்டு இருக்கிறது’ என்று பதற்றத்துடன் தெரிவித்தனர்.

 


இதையடுத்து, போலீஸ் ஸ்டேஷனில் இருந்த தலைமை காவலர் அபிஷேக் படேல், உடனே அங்கு விரைந்து சென்றார். பள்ளி மைதான வளாகத்தில் கிடந்த சுமார் 10 கிலோ எடை கொண்ட வெடிகுண்டை கைப்பற்றினார்.

எந்நேரமும் வெடிக்கலாம் என்ற நிலையில், மாணவர்களின் உயிரை காப்பாற்றும் விதமாக, அந்த வெடிகுண்டை தோளில் தூக்கி வைத்தபடி அபிஷேக் படேல், அங்கிருந்து ஓடத் தொடங்கினார்.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வெடிகுண்டுடன் ஓடிச் சென்ற அபிஷேக், அதனை ஊருக்கு ஒதுக்குப்புறப்படுத்தில் வைத்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்பட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. விசாரணையில், அந்த வெடிகுண்டு ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது என்று தெரிய வந்தது.

துணிச்சலுடன் பத்து கிலோ குண்டை தூக்கிக்கொண்டு மாணவர்களின்
உயிரை காப்பாற்றுவதற்காக ஓடிய தலைமை போலீஸ் காவலருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகளும் அவரது செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.இந்நிலையில், மாணவர்களின் உயிரை காப்பாற்றிய
போலீஸ்காரர் அபிஷேக் படேலுக்கு மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ரூ.50,000 பரிசு வழங்கி கவுரவித்துள்ளார்.

 

இதேபோல், மாநில காங்கிரசாரும் அபிஷேக் படேலின் வீரச் செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here