நடிகை ’பா’ வழக்கில் மற்றொரு நடிகை கைதாகிறார்!

0
2

கேரளாவில் நடிகை ‘பா’ மீது பாலியல் சீண்டல் நடந்தது.

இதுதொடர்பாக பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

பல்சர் சுனில் என்பவரை வாடகைக்கு அமர்த்தி நடிகையை சீண்டியதாக போலீசார் தெரிவித்தனர்.

சுனில், அவரது கூட்டாளிகளும் கைதாகி உள்ளனர்.

இந்நிலையில் திலீப்பின் 2வது மனைவியும், பிரபல நடிகையுமான காவ்யாமாதவனிடம் போலீஸ் விசாரணை நடத்தியது.

அப்போது சுனில் என்ற நபரை தனக்கு தெரியாது என்று போலீசில் தெரிவித்துள்ளார் காவ்யா.

சுனில் 2மாதங்கள் காவ்யாவிடம் டிரைவராக வேலை பார்த்துள்ளார்.

ஒரு சில படங்களிலும் காவ்யாவின் டிரைவராக சுனில் தலைகாட்டியுள்ளார்.

இவ்விபரங்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நடிகை கூறிய பொய்யான தகவலால் அவர் மீது கோபத்தில் போலீசார் உள்ளனர்.

நடிகை ‘பா’மீது நடைபெற்ற பாலியல் சீண்டல்கள் செல்போனில் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

அது காவ்யா நடத்திவரும் பிரபல துணிக்கடையில் இருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கிறது.

இதுதொடர்பாக காவ்யாவின் தாயார் ஷியாமளாவிடமும் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்ற சூழ்நிலை நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here