அழகாய் தோன்ற இளம் பெண்ணுக்கு அபாயகரமான ஆபரேஷன் – விடியோ

0
0

கார்ட்டூன் கேரக்டரைப்போன்று முகத்தோற்றம் பெறவிரும்பினார் இளம்பெண் ஒருவர்.

இதற்காக தாடை மாற்றும் ஆபரேசன் செய்துகொண்டார்.

ஹாலிவுட் நிறுவனத்தின் துணை அமைப்பான பிளாஸ்டிக்ஸ் ஆப் ஹாலிவுட்டில் பணியாற்றிவருபவர் பிக்சி பாக்ஸ்.

இவர் ஓவியர். கார்ட்டூன் கேரக்டர்களை உருவாக்கி அதன் அடிப்படையில் காமிக்ஸ் புத்தகங்களை உருவாக்கி வருகிறார்.

தனது உருவத்தை மையப்படுத்தி இவர் கார்ட்டூன் வரைந்து வருகிறார்.

இவர் வரைந்த ஒரு கார்ட்டூன் கேரக்டரைப்போன்று உருவம் இருப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார்.

இது அபாயகரமான தாடை அறுவை சிகிச்சை ஆகும்.

இதற்காக கொரியாவில் உள்ள சியோல் நகரில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.

அங்குள்ள ஐடி ஆஸ்பத்திரியில் டாக்டர் பார்க் சங் ஹூன் இவரை பரிசோதித்தார்.

பிக்சி தாடையின் மேல் எலும்பை ஆபரேஷன் மூலம் அவர் விரும்பியவாறு மாற்றி அமைத்தனர்.

ஆபரேஷனுக்கு பின்னர் இரு நாட்கள் வலியால் துடித்த பிக்சிக்கு மூக்கின் வழியாக டியூபில் உணவு வழங்கப்பட்டது.

பின்னர் படிப்படியாக அவர் குணம் அடைந்துள்ளார்.

தான் விரும்பிய தோற்றம் தனக்கு கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் பிக்சி பாக்ஸ்.

27வயதான பிக்சிபாக்ஸ் முதல் அறுவை சிகிச்சை 2011ல் செய்துகொண்டார்.

7 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு தனது உடலை கவர்ச்சியாக வைத்துக்கொண்டுள்ளார் இப்பெண்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here