தமிழகத்தில் முதன்முறையாக பிங்க் விடுமுறை அறிமுகம்!

0
0

தமிழகத்தை சேர்ந்த மீடியா நிறுவனம் பெண்களுக்கு பிங்க் விடுமுறை அறிவித்துள்ளது.

மேக்ஸ்டார் என்ற பத்திரிகை தொகுப்பு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

மும்பையை சேர்ந்த 2 நிறுவனங்கள், கேரளாவின் மாத்ருபூமி டிவி ஆகியவை இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளன.

மாதவிடாய் காலத்தின் பெண்களின் அவஸ்தையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு விடுமுறை அளிப்பது பிங்க் விடுமுறை ஆகும்.

தமிழகத்தில் மேக்ஸ்டார் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் விடுமுறை வேண்டி எஸ்.எம்.எஸ். அல்லது மெயில் அனுப்பினால் போதும்.

அவர்களுக்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கும்.

மாதவிடாய்க் காலத்தின் முதல் அல்லது இரண்டாம் நாளில் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

விடுப்பு தேவைப்படும் நாளில் காலை 10 மணி அல்லது அதற்கு முன்னதாகத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு மேக்ஸ்டார் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here