பெரியபாண்டி கொலையானது எப்படி? ராஜஸ்தான் போலீஸ் பரபரப்பு தகவல்

சென்னை: கொள்ளையர்களை பிடிக்கச்சென்ற தனிப்படை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொல்லப்பட்டது குறித்து திடுக் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கொளத்தூரில் நகைக்கடை கொள்ளையர்கள் ராஜஸ்தானில் உள்ள ராம்புர்கலான் இடத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.


இதனைத்தொடர்ந்து பெரியபாண்டியன் தலைமையில் தனிப்படையினர் ராம்புர்கலான் சென்றனர்.
கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பெரியபாண்டியன் இறந்தார். இவ்வழக்கில் ராஜஸ்தான் போலீசார் ஒத்துழைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.


இந்நிலையில் ராஜஸ்தான் மாநில போலீஸ் அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பெரியபாண்டியன் உடலை துளைத்த குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தனிப்படையில் இடம்பெற்ற முனிசேகர் துப்பாக்கியில் இருந்துவந்த குண்டு என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெரியபாண்டியன் உடலில் மிகக்குறைந்த தூரத்தில் இருந்தே குண்டு பாய்ந்துள்ளது. இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author

Related

JOIN THE DISCUSSION