‘பூ’ படத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து குயிலாக பார்வதி மேனன்..!

பூ, மரியான் மற்றும் உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்தவர் பார்வதி மேனன். பூ படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்  தந்தது.

தற்போது பிர்யதர்ஷன் இயக்கத்தில் மகேஷிண்டே பிரதிகாரம் என்ற மலையாள படத்தின் தமிழ் உருவாக்கம் நடந்து வருகிறது.

பெயரிடப்படாத அந்த படத்தில் பார்வதி மேனன் கிராமத்து பெண்ணாக மீண்டும் அவதாரம் எடுக்கிறார். இந்த படத்தில் பார்வதி மேனனுக்கு கதையின்படி நல்ல அழுத்தமான பாத்திரம் என்றும் கூறப்படுகிறது.

மலையாளத்தில் பல சவாலான பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள பார்வதி பிரியதர்ஷன் படத்தை பெரிதும் எதிர் பார்த்துள்ளாராம். இந்த படத்திற்கு பின்னர் தமிழில் அவருக்கு மார்க்கெட் எகிறும் என்றும் கோடம்பாக்க வட்டாரங்கள் சொல்கிறது.

Related Topics : Cinema News

About the author

Related

JOIN THE DISCUSSION