சிறுத்தையின் பிடியில் வனத்துறை அதிகாரி

0
0

சிறுத்தையை பிடிக்கச்சென்ற வனத்துறை அதிகாரி அதன்பிடியில் சிக்கிக்கொண்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமம் ஜடலிமன்புரா.
இக்கிராமத்தில் விவசாயி வளர்த்துவரும் பசுவை சிறுத்தை தாக்கியதாக புகார் வந்தது.

இதனைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரி மற்றும் வனக்காவலர்கள் சிறுத்தையை பிடிக்க சென்றனர்.
அவர்களுடன் மக்களும் திரளாக சென்றனர்.
இதனால் சிறுத்தை மரத்தின் மீது ஏறி தப்பியது.

மரத்தில் இருந்து சிறுத்தையை கீழே இறக்குவதற்காக முயன்றனர்.
இதனால் தரைக்கு பாய்ந்துவந்த சிறுத்தையின் பிடியில் வனத்துறை அதிகாரி ஒருவர் சிக்கிக்கொண்டார்.
உடனடியாக வனக்காவலர்கள் சிறுத்தைக்கு மயக்க ஊசிபோட்டு அதனை பிடித்தனர்.
சிறுத்தையால் காயம்பட்ட அதிகாரி சிகிச்சைபெற்று வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here