பாம்பன் பாலத்தில் 1௦௦-வது விபத்து..! கேக் வெட்டி மக்கள் எதிர்ப்பு..!

பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட 1௦௦-வது விபத்துக்கு பொதுமக்கள் கேக் வெட்டி எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

ராமேஸ்வரத்தையும், மண்டபம் நிலப்பரப்பையும் இணைக்கும் பாம்பன் பாலம் 3௦ ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

பாம்பன் பாலம் சாலை பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது. இந்த சாலையை பராமரிக்கும் பணி கடந்த ஜுன் மாதம் தேசிய நெடுஞ்சாலை துறை மேற்கொண்டது.

இந்த பாம்பன் பாலம் மீதான சாலையை 2.6௦ கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை துறை ரப்பர் சாலை அமைத்தது.

மழைக்காலங்களில் வாகனங்கள் இந்த ரப்பர் சாலையில் சறுக்குகிறது. இதனால் வாகனங்கள் நேருக்குநேர் மோதியும், தடுப்பு சுவர்கள் மீது மோதியும் விபத்து ஏற்பட்டு வந்தது.

இந்த பாலம் 2 மாதங்களில்1௦௦ விபத்துக்களை சந்தித்ததை முன்னிட்டு அப்பகுதி மக்கள் கேக் வெட்டி அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்

About the author

Related

JOIN THE DISCUSSION