படம் வெளிவரும் முன்னரே பாடமான பத்மாவதி!

0
2

புதுடெல்லி:சர்ச்சைக்குரிய பத்மாவதி திரைப்படம் ரிலீஸ் ஆகுமுன்னரே பாடமாகி உள்ளது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாற்றுப் பரீட்சைக்கான கேள்வி தாளில் பத்மாவதி குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

வினாத்தாளின் 10மதிப்பெண்கள் பிரிவில், ஜோஹர் பாரம்பரியம் என்ன சொல்கிறது?அலாவுதீன் கில்ஜி காலத்தில், ராணி பத்மாவதியின் ஜோஹர் குறித்து விவரிக்கவும் என்றும் கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் முத்தலாக் குறித்து விளக்கவும் என்று மற்றொரு கேள்வியும் இடம் பெற்று உள்ளது.

சுல்தானிய ஆட்சியில் முஸ்லிம் பெண்களின் நிலை குறித்த கேள்வி இடம்பெற்று உள்ளது.
இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று மாணவர்கள் சமகால வரலாற்றை எந்த அளவுக்கு தெரிந்துகொண்டுள்ளார்கள் என்பதற்காக இக்கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற சமகாலங்களின் நிகழ்வுகளில் வினாக்கள் இடம்பெறுவது வழக்கமான ஒன்றுதான் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here