அலாவுதீன் கில்ஜியை கொண்டாடிய பத்மாவதி டிரெய்லர்!

0
0

இந்தி இயக்குநர்  சஞ்சய் லீலா பன்சாலியில் புதிய படம் பத்மாவதி.

வரலாற்றையும், பிரமாண்டத்தையும் கிராபிக்ஸ் காக்டெய்லாக தருபவர் பன்சாலி.

இவரது முந்தைய படமான பாஜிராவ் மஸ்தானி’ படத்தைத் தொடர்ந்து தற்போது பத்மாவதியை எடுத்துள்ளார்.

டிசம்பர் 1ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினியின் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கிறார்.

இதன் ட்ரெய்லர் இன்று 13.03 அதாவது பகல் ஒருமணி மூன்று நிமிடத்துக்கு வெளியானது.

அலாவுதீன் கில்ஜி சித்தூர் கோட்டையை பிடித்த ஆண்டு 1303.  அதை நினைவுபடுத்தும் விதமாக இந்த டிரெய்லர் 13.03க்கு வெளியாகி உள்ளது.

7500 திரையரங்குகளில் வெளியாகிச் சாதனை படைத்த பாகுபலி படத்தை மிஞ்சும் விதமாக, 8000 திரையரங்குகளில் இதை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

பன்சாலி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் வைகாம் 18 பிக்சர்ஸ் இணைந்து பத்மாவதியை தயாரித்துள்ளன.

டிரெய்லர் வெளியான சிறிதுநேரத்தில் டிரெண்டாகி தொடர்ந்து வருகிறது.

தீபிகா படுகோன் ராணி பத்மினியாகவும், ஷாஹித் கபூர் தீபிகாவின் கணவராக மகாராவாள் ரத்தன் சிங் கேரக்டரிலும் நடித்திருக்கிறார்கள்.                                            பத்மினியைக் கவர்ந்து செல்ல முயலும் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங் நடித்திருக்கிறார்.

அதிதி ராவ், சோனு சூட் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்துவருகிறார்.

இயக்கம் மட்டுமன்றி இசை, பாடல்கள் பணியையும் பன்சாலி செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here