சர்ச்சை சினிமா பத்மாவத்! தமிழ் டிரெய்லர் ரிலீஸ்!!

0
1

மும்பை: சர்ச்சைகளை தாண்டி திரைக்குவரும் தீபிகா படுகோன், ரன்வீர்சிங் நடித்துள்ள பத்மாவத் படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகி உள்ளது.


ராஜபுத்ர அரசவம்சத்து ராணியான பத்மாவதியின் சரித்திரத்தை மையமாக வைத்து பத்மாவதி என்ற படத்தை பிரபல இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கியுள்ளார்.
இதனை வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் எடுக்கப்படும்போதே சர்ச்சை ஏற்பட்டது. ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் ராஜபுத்ரவம்ச இளைஞர் சங்கத்தினர், இந்து அமைப்பினர் கலாட்டா செய்தனர்.


படம் முடிவடைந்ததும் பல்வேறு மிரட்டல்களை சந்தித்தது. இந்நிலையில், படம் தணிக்கை செய்யப்பட்டு 26காட்சிகள் வெட்டப்பட்டன.

படத்தின் பெயரும் பத்மாவத் என்று மாற்றப்பட்டது. அப்படம் இம்மாதம் 25ம் தேதி ரிலீசாகிறது.
இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு அன்றைய தினமே வெளியாகிறது. அதன் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here