ஜெயலலிதா நினைவிடம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது தீபா காட்டம்

0
2

அதிமுகவுடன் இணைய பன்னீர் அணி விதித்துள்ள நிபந்தனைகளில் ஒன்று போயஸ் தோட்டத்தை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றவேண்டும் என்பது.
இதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. போயஸ் தோட்டம் அரசுடைமையாக்கப்படவுள்ளது. 

அதனை கண்டித்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிக்கை:
சசிகலாவின் பினாமி எடுபிடி அரசு போயஸ் தோட்ட இல்லத்தை திடீர் ஞானோதயம் வந்து நினைவு இல்லமாக்க உள்ளது.
இது போலி ஏமாற்று நாடகம்.
சசிகலா கூட்டத்தின் ஊழல் வெட்டவெளிச்சமாகியுள்ள நிலையில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் நப்பாசையில், தொண்டர்களஏமாற்றவுமே இந்த நாடகம்.
அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் படத்திறப்புகூட நடத்தவில்லை.
இவர்களுக்கு நினைவு இல்லம் பற்றி தீர்மானம் நிறைவேற்ற தகுதியில்லை.

பாட்டிகாலத்தில் அத்தையுடன் ஓடிவிளையாண்ட எங்கள் பூர்வீக இல்லத்தை இடையிலேயே சதிகாரர்களால் பிரித்து வைக்கப்பட்டோம்.

ஊழல் கறைபடிந்த கூட்டம், நினைவுஇல்லம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தை அபகரிக்க திட்டமிட்டுள்ளது.

ஓபிஎஸ், இபிஎஸ் இரு அணிகளின் போலி வேடதாரிகளை அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


எனது தலைமையில் லட்சக்கணக்கானத் தொண்டர்கள் எழிச்சியோடும்,உணர்ச்சியோடும் செயல்பட்டு வருவதை சகிக்க முடியாத அடிமைகள் கூட்டம் என் வளர்ச்சியைத் தடுப்பதற்காக நினைவு இல்ல நாடகத்தை அரங்கேற்ற நினைக்கின்றனர்.
இவ்வாறு அறிக்கையில் தீபா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here