ஓஹோ! : தண்ணீர் பாட்டிலையும் அப்படியே சாப்பிடலாம்

0
0

ப்ளாஸ்டிக் பெட் பாட்டில்களுக்கு மாற்றாக ஓஹோ என்ற புதிய பேக்கேஜிங் பொருளை ஐவர் குழு கண்டுபிடித்துள்ளது.

ரோட்ரிகோ, பியரி பாஸ்லியர், மானுவல்லோபஸ், லிசா, லிமா ஆகிய ஐந்துபேரும் பிரிட்டனை சேர்ந்தவர்கள்.
ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப் என்ற நிறுவனத்தை பிரிட்டனில் 5 ஆண்டுகளுக்கு முன் துவக்கினர்.

ப்ளாஸ்டிக் பொருளுக்கு மாற்றாக பேக்கேஜிங் செய்வதற்கான புதிய பொருளை கண்டுபிடிக்க ஆர்வம் கொண்டு ஆராய்ச்சி செய்தனர்.

இறுதியாக, கடல் பாசியில் இருந்து தண்ணீரை பேக்கிங் செய்வதற்கான ஓஹோ என்ற பொருளை கண்டுபிடித்துள்ளனர்.

ஓஹோவில் பேக்கிங் செய்யப்படும் தண்ணீரையும், ஓஹோவையும் அப்படியே சாப்பிடலாம்.
இதில் பல்வேறு நிறங்கள் சேர்த்து கலர்கலராக விற்பனை செய்யலாம்.

தண்ணீர் மட்டுமின்றி குளிர்பானங்கள், ஸ்பிரிட் ஆகியவற்றையும் ஓஹோவில் பேக் செய்யமுடியும்.

தண்ணீரை குடியுங்கள், பாட்டிலை சாப்பிடுங்கள் என்று வேடிக்கையாக விளம்பரம் செய்து ஓஹோ விற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

ப்ளாஸ்டிக், பெட் பாட்டில் உபயோகத்தை விடவும் கடல்பாசி பேக்கிங்கை உபயோகப்படுத்துவதால் ஆண்டுக்கு 300மில்லியன் கிலோ கார்பன்.டை.ஆக்சைடு உபயோகத்தை குறைக்க முடியும் என்கின்றனர் ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப் நிர்வாகிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here