வீடு தேடிச்சென்று கட்டிப்பிடி வைத்தியம்!

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சையை வீட்டுக்கே சென்று அளிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார் நடிகை தீபிகா படுகோன்.

பத்மாவதி இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருந்தபோதும் மனநலம் பாதிக்கப்பட்டோரை கருத்தில் கொண்டு புதிய சிகிச்சை திட்டத்தை தொடங்க  கர்நாடக மாநிலம் தாவணகெரே வந்தார்.

இன்போசிஸ் அறக்கட்டளை, தீபிகாவின் லிவ்,லவ்,லாஹ் அமைப்பு சேர்ந்து ஜக்கூர் தாலுகாவில் மனநல சிகிச்சை அளித்து வருகின்றன.

கர்நாடகாவில் 2 தாலுகாக்களில் இந்த அமைப்புகள் இச்சிகிச்சையை நடத்துகின்றன.

சில மாதங்களுக்கு முன்னர் தீபிகா படுகோன் அளித்த பேட்டி ஒன்றில், தனது முன்னேற்றத்துக்காக தான் கடந்துவந்த கஷ்டங்கள் குறித்து தெரிவித்திருந்தேன்.                                                                                      கடந்த காலத்தின் தனது மனம் மிகவும் நோகடிக்கப்பட்டிருந்தது என்று அவர் கூறினார்.            அதுபோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ‘லிவ்..லவ்..லாஹ்’ (அன்புடன்வாழ்ந்துமகிழ்வோம்) என்ற அமைப்பை தொடங்கியுள்ளார்.

மனநலனால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆறுதல், நம்பிக்கை அளித்தல் ஆகியவை மனநல சிகிச்சையில் மிகவும் முக்கியமானவை. தங்களுக்காக சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துள்ளவர் உதவுகிறார், ஆறுதல் கூறுகிறார் என்பதே பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

About the author

Related

JOIN THE DISCUSSION