தமிழகத்தில் 110 எண்ணெய்க்கிணறுகள்! ஓ.என்.ஜி.சி. உறுதி!!

 

தமிழகத்தில் 110 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைத்தே தீருவோம் ஓஎன்ஜிசி செயல் இயக்குநர் குல்பீர்சிங் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஓஎன்ஜிசி செயல் இயக்குநர் குல்பீர்சிங் செய்தியாளர்களை சந்தித்தார்

அவர் கூறியதாவது:

காவிரிப் படுகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது ஓஎன்ஜிசி நிறுவனம்..

இதன்மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்யப்பட்ட110 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படும்.

இதை தவிர வேறு இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்கும் திட்டம் இல்லை என்று கூறினார்

silhouettes of oil pumps placed one after another against the sunset

 

ஓஎன்ஜிசி நிறுவனம் ,நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமோ, மீத்தேன், ஸேல் காஸ் போன்ற எந்த திட்டப் பணிகளிலும் இதுவரை ஈடுபடவில்லை.ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக பரப்பப்படும் செய்திகளை சமூகவலைத்தளங்கள் நிறுத்திகொள்ள வேண்டும்.இல்லை எனில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் நிலத்தடி நீரோ, அதன் தரமோ பாதிக்கப்படவில்லை.
இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி விரைவில் ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.

About the author

Related

JOIN THE DISCUSSION