எங்களை அசைத்துத் தான் பார்க்கட்டுமே..! தினகரனுக்கு முதல்வர் சவால்..!

0
0

எங்களை யாராலும் அசைத்து விட முடியாது என்று மறைமுகமாக தினகரனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சவால் விடுத்துள்ளார்.

கடலூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:


நீட் தேர்வில் தமிழகத்துக்கு நல்லது நடக்கும். பலர் எங்களை அசைத்துப்பார்க்க நினைக்கின்றனர். அது நடக்காது. நாங்கள் சரியான பாதையில் பயணிக்கின்றோம். யாராலும் எங்களை அசைக்க முடியாது என்று தினகரனுக்கு மறைமுகமாக சவால் விடுத்தார்.

இதில் மத்திய அரசின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பதால் அவர் தன்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்று தைரியமாக உள்ளார். ஏற்கனவே மன்னார்குடி குடும்பம் கட்சியிலும் ஆட்சியிலும் இருந்து ஆதிக்கம் செய்வதை தடுப்பதற்கு பா.ஜ., அரசும் முனைப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Topics: Tamilnadu News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here