கழிப்பறை இல்லன்னா கரண்ட் கட்..! ராஜஸ்தானில் அதிரடி..!

0
0

ராஜஸ்தானில், 15 நாட்களில் வீடுகளில் கழிப்பறை கட்டவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்ற மாவட்ட துணை கலெக்டர் உத்தரவுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள கங்கிதலா கிராமத்தில் மாவட்ட துணை கலெக்டர் கர்டார் சிங், திறந்த வெளியில்  மலம் கழிப்பதை தவிர்க்கும் வகையிலான விழிப்புணர்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது, கிராம மக்கள் வீடுகளில் கழிப்பறை கட்ட மறுப்பு தெரிவித்து அவருடன் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து 6 பேரை  கைது செய்த போலீசார், பின்னர் ரூ.10 ஆயிரம் பிணையத்தொகை மற்றும் வீடுகளில் கழிப்பறை கட்டி 15 நாட்களின் பயன்படுத்த  துவங்குவேன் என்ற உறுதிமொழியை ஏற்று அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், துணை கலெக்டர் கர்தார் சிங் அதிரடியாக, 15 நாட்களுக்குள் கழிப்பறை கட்டி பயன்படுத்தாத கிராமவாசிகள் வீட்டின்  மின்சாரம் துண்டிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

கிராமத்தில் 19 சதவீதத்தினர் மட்டுமே தங்கள் வீட்டில் கழிப்பறை கட்டியுள்ளனர். இது தொடர்பாக ஆய்வு நடத்திய கிராம பஞ்சாயத்து,  திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களுக்கு அபராதம் மட்டும் விதித்தது.

இதனால், கழிப்பறை கட்டாத வீடுகளில் மின்சாரத்தை துண்டிக்க உத்தரவிட்துள்ளேன். இதற்கு மேலும் கழிப்பறை கட்டாவிட்டால், ரேசன் பொருட்கள் வழங்கப்படமாட்டாது என்று கூறினார்.


இந்த உத்தரவிற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையறிந்த உயர் அதிகாரிகள் தலையீட்டால் அந்த உத்தரவு திரும்பப்  பெறப்பட்டது.

 

மாவட்ட கலெக்டர் முத்தானந்த் அகர்வால் கூறுகையில், இந்த உத்தரவு மிகவும் கடுமையானது என உணர்கிறோம். இதனால், உத்தரவை மாற்றும்படி துணை கலெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மின்சாரத்தை துண்டிக்க தேவையில்லை. கழிப்பறை கட்ட வேண்டும் என மக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றார்.

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here