ஆன்லைனில் ரயில் டிக்கட் புக் செய்ய 2018மார்ச் வரை சேவை கட்டணம் கிடையாது..!

0
2

நேரடியாக வந்து புக் செய்வதை காட்டிலும், ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கட் புக் செய்வது அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ரூ.20 முதல் ரூ.40 வரை சேவைக் கட்டணமாக ரயில்வே வசூலித்து வருகிறது.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு சேவைக் கட்டணம் ரயில்வே துறையால் கடந்த நவம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டிருந்தது.

பின்னர் அது ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு,மீண்டும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், ரயில்வே சேவைக் கட்டணம் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடர்ந்து ரத்து செய்யப்படுவதாக ரயில்வேத் துறை
தற்போது அறிவித்துள்ளது.

இதுதொடர்பான சுற்றறிக்கை கடந்த செப்டம்பர் 29-ம் தேதியே ஐஆர்சிடிசி-க்கு ரயில்வே வாரியம் அனுப்பியது, தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த நிதியாண்டு கணக்கின்படி ரயில்வேத் துறையின் மொத்த வருமானமான ரூ.1,500 கோடியில், ரூ.540 கோடி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கான சேவைக்கட்டணத்திலிருந்தே பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here