சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி தேவையில்லை!

0
0

துபாய்:சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி உலகம் முழுவதும் நடந்து வருகிறது. அதில் மைல்கல் வெற்றியை துபாய் அரசு மருத்துவமனை அடைந்துள்ளது.

மனித உடலில் உள்ள கணையம் இன்சுலின் என்ற திரவத்தை சுரக்கிறது. அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சக்தியாக மாற்றி சேமிக்க உதவுகிறது.

இன்சுலின் சரியாக சுரக்காமல் இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி  பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இன்சுலின் உடலில் இயற்கையாக சுரக்கச்செய்வதற்காக தடுப்பூசி  அறிமுகப்படுத்தும் முயற்சி உலக நாடுகள் பலவற்றில் நடந்து வருகிறது.

துபாய் அரசும் இதுதொடர்பான முயற்சிகளை ஊக்குவித்து வருகிறது.  துபாய் டாக்டர்கள் இன்சுலினை ஊக்குவிக்கும் பொருளாக ப்ளாட்டினத்தை கண்டறிந்துள்ளனர்.

சுமார் 5செமீ நீளமுள்ள ப்ளாட்டின துண்டை கையில் ஆபரேஷன் செய்து பொருத்துகின்றனர். இதனால், சுமார் ஓராண்டு வரை இன்சுலின் தேவைக்கேற்ப உடலில் சுரக்கிறது.

இதனால் எந்த பின்விளைவும் இல்லை. அதேநேரம் ஆண்டுதோறும் ப்ளாட்டினம் பொருத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here