மனித உயிரா..? மதுபான வருவாயா..? எது முக்கியம்?

தமிழகம் எங்கும் டெங்கு எனும் அரக்கனின் கோர முகம் தலை விரித்து ஆடுகிறது. ஆனால், அமைச்சர்கள் டெங்கு இல்லை என்று அதை மர்ம காய்ச்சல் என்று தவறான அறிக்கை தருகிறார்கள்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் சுகாதார பிரச்னைகளும் நோய் தடுப்பு குறைபாடுகளும் ஏற்பட்டுள்ளது. அடிப்படை மருத்துவ வசதிகள் சீர்கெட்டு கிடக்கிறது.

முன்பு டெங்கு பரவியதைவிட தற்போது குறைவுதான் என்று ஒப்பீடு செய்வதை விட்டு விட்டு கிராமங்கள் தோறும் சுகாதார கமிட்டிகளை உருவாக்கி,ஆய்வு கூட்டங்கள் நடத்தி டெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் தேகு பரவி வரும் பரபரப்பான சூழல் நிலவும்போது தமிழக அரசு அது பற்றி எவ்வித கவலையும் கொள்ளாமல் அமைச்சரவை கூட்டத்தில் டாஸ்மாக் மதுபான் விலையை உயர்த்துவதற்கும், அரசு ஊழியர்களின் 7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல் படுத்துவதற்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மக்களின் அதி முக்கிய சுகாதார பிரச்சனையான டெங்கு குறித்து அந்த கூட்டத்தில் எந்த எவ்வித ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அரசின் வருமானம் குறித்து மட்டுமே கவலை கொள்ளும் இந்த அரசு மக்களின் அடிப்படை சுகாதார பிரச்சனைகளைப் பற்றி கவலை கொள்ளவில்லை. டெங்கு காய்ச்சல் பரவி பல உயிர்களை பலி வாங்கிக் கொண்டுள்ளது என்று எதிர்
கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Topics : Tamilnadu News

About the author

Related

JOIN THE DISCUSSION