நியூயார்க் நகரில் மாடலிங் பெண் சுதந்திர ஷாப்பிங்!

0
2

நியூயார்க்:அமெரிக்கா முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகுஜோராக நடந்து வருகிறது.
நியூயார்க் நகரில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் ஷாப்பிங் செய்ய ஆடையேதுமின்றி சென்றுள்ளார் ஒரு பெண்.


மாடலிங் செய்துவரும் பெண் லில்லிபக்ரி(22) இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட நினைத்தார்.
அதற்காக பிரபல பெயிண்டர் ஜென் உதவியை நாடினார். ஜென் உடலில் தத்ரூபமாக படங்கள் வரையக்கூடிய கலைஞர்.
லில்லிபக்ரி உடலில் சுமார் 5மணிநேரம் செலவிட்டு அவர் ஸ்வெட்டர் அணிந்திருப்பது போன்று படம் வரைந்தார்.


அந்த படத்துடன் ஷாப்பிங் கிளம்பினார் லில்லிபக்ரி. முதலில் நியூயார்க் நகரில் நடந்த சாந்தாகான் விழாவில் பங்கேற்றார். அந்த விழாவில் மக்கள் தங்கள் பழைய ஸ்வெட்டர்கள், தொப்பிகள் ஆகியவற்றை ஏழைகளுக்கு வழங்குவார்கள்.
அதனைத்தொடர்ந்து லில்லி, ராக்பெல்லர் செண்டர், பிரியண்ட் பார்க் பகுதிகளில் சுதந்திரமாக சுற்றிவந்தார்.
ஒருசிலர் லில்லியின் உடையை அடையாளம் கண்டுகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


அமெரிக்க சட்டப்படி, உடலின் பாகங்கள் தெரியும் வகையில் நடமாடுவது குற்றம். இதனால் அதிகமாக ரிஸ்க் எடுக்க விரும்பாத லில்லி விரைவாக வீடு திரும்பிவிட்டார். அவர் பாடி பெயிண்டிங்குடன் செய்த ஜாலி ஷாப்பிங்கை  விடியோவாக்கி நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here