சென்னை சினிமா சென்சார் போர்டு குழுவில் நடிகை கவுதமி..?!

0
0

சென்னை சினிமா சென்சார் போர்டு குழுவில் நடிகை கவுதமி நியமனம் செய்யப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

இந்திய சென்சார் போர்டு தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பஹ்லால் நிஹ்லானி இருந்து வந்தார். அவர் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்து கொண்டே இருந்தது.

 

 

மேலும் பல படங்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் கெடுபிடி காட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் மீது பாலிவுட் திரைத்துறையினர் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

(பரசூன் ஜோஷி)

 

இந்நிலையில் திடீரென சென்சார் குழு தலைவர் பதவியில் இருந்து பஹ்லால் நிஹ்லானி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய தலைவராக பாலிவுட்டில் பிரபல பாடலாசிரியரும்,பாடகருமான பரசூன் ஜோஷியை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

(பஹ்லால் நிஹ்லானி)
பாலிவுட்டில் சென்சார் குழு தலைவர் மாற்றத்தால் சென்னை சென்சார் குழுவிலும் மாற்றம் வரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

 
சென்னை சென்சார் குழுவில் நடிகை கவுதமி மற்றும் இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் இடம் பெறலாம் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Topics : Cinema News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here