புதிய குடியரசுத்தலைவர் யார்?: வைரவிழாவில் வெளிச்சமிட்டு காட்டுவாரா கருணாநிதி

0
0

நாட்டின் புதிய குடியரசுத்தலைவரை திமுக தலைவர் இம்முறை அடையாளம் காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு தேசிய முற்போக்கு கூட்டணி தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் திமுக தலைவர் மு.கருணாநிதி.
1957-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
13 முறை தொடர்ச்சியாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்துதேர்தல்களிலும் வென்றவர்.
பேரவை பணிகளில் அவர் ஈடுபட்டு 60ஆண்டுகள் நிறைவடைகிறது.


அதனை திமுக சார்பில் வைரவிழாவாக கொண்டாடுகின்றனர்.
ஜூன் 3ம் தேதி சென்னையில் பிரமாண்டவிழா நடைபெறுகிறது.
கருணாநிதியின் 94வது பிறந்தநாள் மற்றும் சட்டமன்ற வைரவிழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள், 5மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

மாநில சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்தை கடைபிடித்தவர் கருணாநிதி.
மத்தியில் நிலையான ஆட்சி அமைய இந்திராகாந்தி காலத்தில் இருந்து அவர் உதவிவந்துள்ளார்.

குடியரசு தலைவர் தேர்தலிலும் அவரது பங்கு முக்கியமானதாக இருந்துள்ளது.
கலாமுக்கு பின்னர் பிரதீபா பாட்டீல் குடியரசுத்தலைவராக கருணாநிதி காரணமாக இருந்தார்.

இந்தியாவில் பெண் குடியரசு தலைவரை தேர்ந்தெடுத்துள்ளதோடு சமூகநீதியும் காக்கப்பட்டுள்ளது என்று அவரே தெரிவித்துள்ளார்.

பிரணாப்முகர்ஜியை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்ததும் ஒப்புக்கொண்டு அவர் வெற்றிக்கு ஒத்துழைத்தார்.

நாட்டின் 14வது குடியரசுத்தலைவர் தேர்தல் நெருங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது.
இதற்காக, காந்தியடிகளின் பேரன் உள்ளிட்ட பல தலைவர்களது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

தனது பேரவை வைரவிழாவில் இந்தியாவை வழிநடத்த குடியரசுத்தலைவரை திமுக தலைவர் அடையாளம் காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு அவரது கட்சிப்பிரமுகர்களிடம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here