‘நான் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற சரியான தருணம்’..! ஆஷிஷ் நெஹ்ரா..!

ஆஷிஷ் நெஹ்ரா(38) அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதை அறிவித்துள்ளார். நான் ஒய்வு பெறுவதற்கான சரியான தருணம் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

மேலும் அவரது ஒய்வு குறித்து கிரிக்கெட் டீம் மேனேஜ்மென்ட் மற்றும் தேர்வுக் குழு சேர்மேன் ஆகியோரிடமும் பேசிவிட்டார். நியூசிலாந்துடனான டி20 தொடரின் முதல் போட்டி டில்லி பெரோஸ்ஷா கோல்டா மைதானத்தில் நடக்கிறது. அதில் மட்டும் அவர் விளையாடுவார் என்று தெரிகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது ரஞ்சி ட்ராபி போட்டிகளை அந்த மைதானத்தில் தான் தொடங்கினார். ‘நான் ஆட்டத்தை தொடங்கிய இடத்திலேயே முடிக்க நினைத்தேன். அதனால் தான் எனது மண்ணான டில்லியை தேர்வு செய்தேன்.’ என்றார் உருக்கமாக.

2016 ஐபிஎல் போட்டிகள் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து சர்வதேச விளையாட்டு வரை தொடர்ந்துவிட்டார்.

‘இந்திய அணிக்கு இளம் ரத்தங்கள் புவி, பூம்ரா ஆகியோர் நல்ல இடத்தை நிரப்புகின்றனர். ஆகையால் இந்த தருணம் எனது ஓய்வுக்கான சரியான தருணம் என்று நினைக்கிறேன்’ என்கிறார்.

‘என்னைப் பொறுத்த வரை நான் நெஞ்சுரம் கொண்டவன். என்னை இந்திய அணிக்கு தயார்படுத்திக்கொண்ட போதும் தினம் தினம் கற்றுக்கொள்பவனாகவே கருதிக் கொள்வேன்.

அது மேலும் என்னை செதுக்கிக்கொள்ள உதவியது.  நவம்பருடன் நான்  அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுகிறேன்’ என்றார், ஆஷிஷ் நெஹ்ரா.

Related Topics : Sports News

 

About the author

Related

JOIN THE DISCUSSION