நீட் முதலில்…பேரம் அப்புறம்! ஓபிஎஸ்சுக்கு கமல் கோரிக்கை!!

அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி தலைவர் பன்னீர்செல்வத்துக்கு டுவிட்டரில் அறிவுரை கூறியுள்ளார் நடிகர் கமலஹாசன்.

நீட் தேர்வு குறித்து மத்திய அரசிடம் பேசுங்கள்.

மாணவர்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள்.

மத்திய அரசு ஒத்துழைக்க தயாராக உள்ளது.

பிறகு பேரம் பேசுங்கள் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார் கமலஹாசன்.

 

பன்னீர்செல்வம் நாளை பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்துக்கு ஓராண்டு மட்டுமே விலக்கு அளிக்க முடியும்.

அவசர சட்டம் இயற்றினால் மட்டுமே அது முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் குழு அவசர சட்டத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

மத்திய அரசின் முடிவுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், அவசர சட்டத்தின் மாதிரியுடன் திங்கட்கிழமை டெல்லி செல்வோம்.

இது தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியிக்கு கிடைத்த வெற்றி என்றார்.

 

 

 

 

About the author

Related

JOIN THE DISCUSSION