புல்லட் ரயில் அவசியமா?..! சிவசேனா கடும் விமர்சனம்…!

‘ஏழைகளின் கனவு புல்லட் ரயிலில் பயணம் செய்வதில் இல்லை’ என்று சிவசேனா கடும் புல்லட் ரயில் திட்டம் குறித்து விமர்சனம் செய்துள்ளது.

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓர் அங்கமான சிவசேனா அண்மைக் காலமாக பா.ஜ., அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.


ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகிய இருவரும் சேர்ந்து அகமதாபாத் முதல் மும்பை வரையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள்.

இந்த அடிக்கல் நாட்டு விழா குறித்து சிவசேனா அமைப்பு கடுமையான விமர்சனம் செய்து அந்த அமைப்பின் நாளேட்டில் வெளியிட்டுள்ளது.

அந்த நாளேட்டில் கூறியுள்ளதாவது:

‘ பல ஆண்டுகளாக விவசாய மக்கள் கடன் தள்ளுபடி கேட்டு போராடி வருகின்றனர். இந்நிலையில் புல்லட் ரயில் நாட்டின் தேவைக்கு பொருத்தமானதா? மோடியின் கனவு, ஏழை, எளிய மக்களை பற்றியது அல்ல. பணக்காரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பற்றியது.

புல்லட் ரயில் திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெருகும் என்பார்கள். அது தவறான கருத்து. ஜப்பான், தனது நாட்டின் இயந்திரம் முதல் தொழிலாளர்கள் வரை இங்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதனால்,இந்தியாவில் வேலை வாய்ப்பு பெருகும் என்பதெல்லாம் வெறும் கனவு. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author

Related

JOIN THE DISCUSSION