தாய்மொழி இல்லாமல் எந்த கல்வி நிறுவனமும் இயங்க முடியாது..!

தாய் மொழியான தெலுங்கை கற்பிக்காமல் இனி தெலுங்கானாவில் எந்த கல்வி நிறுவனமும் இயங்க முடியாது என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 19 ம் தேதி வரை உலகத் தெலுங்கு மாநாடு ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. அந்த மாநாடு தொடர்பான ஆலோசனைக கூட்டம் நடந்தது. அதில் பேசிய முதல்வர் சந்திரசேகரராவ்,

” இனிமேல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெயர் பலகைகள் தெலுங்கில் மட்டுமே இருக்க வேண்டும். அப்படி வேறு மொழியிலும் பெயர் பலகை வைக்க விரும்பினால் தெலுங்குடன் சேர்த்துத்ஜ்ஹ தான் வைக்க வேண்டும்.

ஆனால், தெலுங்கு மொழி கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை கண்டிப்பாக தெலுங்கு பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.

அடுத்தக் கல்வியாண்டு முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும். அனைத்துப் பாடங்களையும் தெலுங்கு மொழியில் உருவாக்குவதற்காக சாகித்ய அகாடமிக்கு ஐந்து கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய பாடப் புத்தகங்கள் அனைத்தும் இனி தெலுங்கிலேயே அச்சிட ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. உருது மொழி படிக்க விரும்பும் மாணவர்கள் விருப்ப மொழியாக தெலுங்கை தேர்வு செய்து படிக்கலாம்.

அதேபோல் தெலுங்கு கற்பிக்கப்படாமல் இனி எந்தக் கல்வி நிறுவனமும் தெலுங்கானாவில் இயங்க முடியாது” என்று எச்சரிக்கும் விதமாக கூறினார்.

Related Topics : National News

 

About the author

Related

JOIN THE DISCUSSION