அதிக குற்ற பின்னணியில் பா.ஜ.,.! பகீர் தகவல்..!

0
2

இந்தியா முழுவதும் உள்ள எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் வேட்புமனுவை ஆய்வு செய்ததில் 1581 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.

ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் உள்ள 776 எம்.பி.,க்கள் மற்றும் 4,120 எம்.எல்.ஏ.,க்களின் தேர்தல் வேட்பு மனுக்களை ஆய்வு செய்தது.

ஆய்வு செய்யப்பட்ட முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் 1,581 பேர் தங்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் உள்ளதை அவர்களே தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளனர். அதில் நாடு முழுவதும் 51 பா,ஜ., எம்.பி., எம்.எல்.ஏ.,-க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் மற்ற கட்சிகளில் சிவசேனாவில் 7 பேர், திரிணமுல் காங்கிரசில் 6 பேர், பகுஜன் சமாஜ் கட்சியில் 36 பேர் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 27 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததில் பா.ஜ., முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here