அமைச்சர்கள் கூட்டத்தில் குரங்குகள் பங்கேற்பு!

0
1

பாகல்கோட்டை: அமைச்சர்கள் கூட்டத்தில் குரங்குகள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் நடந்தது கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை நகரத்தில்.


சுகாதாரத்துறை அமைச்சர் பிரகாஷ்பாட்டீல், வருவாய் அமைச்சர் காகோடு திம்மப்பா,
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் கே.ஹெச். பாட்டீல் ஆகியோர் பங்கேற்ற அரசு விழா நடந்து கொண்டிருந்தது.
அமைச்சர் காகோடு திம்மப்பா பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்துக்குள் திடீரென்று குரங்குகள் புகுந்தன.


அதனை விரட்ட பாதுகாப்பு அதிகாரிகள் முயன்றனர். அவர்களை குரங்குகள் மிரட்டின.
ஒரு குட்டிக்குரங்கு மேடையில் இருந்த பேனரில் ஏறி சாகசம் காட்டியது.
இதனால் மேடையில் இருந்த முக்கியப்பிரமுகர்கள் அச்சம் அடைந்தனர். அமைச்சர்கள் முன்னால் வைக்கப்பட்டிருந்த டீபாயில் இருந்த பிஸ்கட், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு குரங்குகள் சென்றுவிட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here