4நிமிடங்களில் 87 ஆயிரம் காலி..! உஷாரா இருங்க..!

0
0

சுங்கச் சாவடியில், டெபிட் கார்டை கொடுத்து சுங்க வரி செலுத்திய ஒரு தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து நான்கே நிமிடங்களில் 87 ஆயிரத்தை அபேஸ் செய்த விவகாரத்தை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


புனேயை சேர்ந்தவர் தர்ஷன் பாட்டீல்(36). அவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், இவர் அவரது காரில் மும்பை சென்ற போது டெபிட் கார்டை பயன்படுத்த காலாபுரில் சுங்க வரி செலுத்தியுள்ளார். 230 ரூபாய்க்கான ரசீதை தந்தனர்.


அவரது வங்கி கணக்கிலிருந்து சுங்க வரிக்கான பணம் எடுக்கப்பட்டதற்கான தகவல், அவரது மொபைல் போனுக்கு வந்தது. பின்னர் அன்று மாலை மற்றும் இரவும் அவரது மொபைலுக்கு மெசேஜ் வந்தது.

அதில், அவரது டெபிட் கார்டை பயன்படுத்தி, 20 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கப்பட்டதாக இருந்தது.இப்படியாக அவரது மொபைலுக்கு, ஆறு மெசேஜ்கள் வந்தன.


அதில் நான்கே நிமிடத்தில் அவரது டெபிட் கார்டை பயன்படுத்தி அவரது வங்கி கணக்கிலிருந்து, 87,000 ரூபாய் எடுக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த தர்ஷன் உடனே போலீசில் புகார் செய்தார். பணம் எப்படி களவாடப்பட்டிருக்கும் என்று, புனேயைச் சேர்ந்த சைபர் குற்ற

தடுப்பு ஆலோசகர், ரிதேஷ் பாட்டியா கூறும்போது,

‘பணம் செலுத்துவதற்காக, ஸ்வைப்பிங் மிஷினில் தேய்ப்பதற்கு, கார்டை ஊழியரிடம் தருவது வழக்கம். மிஷினிலிருந்து ரசீது வரும்
வரை கார்டும் ஊழியரிடமே இருக்கும். அந்த நேரத்தில்,கார்டை மீண்டும் ஒருமுறை ‘ஸ்கேன்’ செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.


ஸ்வைப்பிங் மிஷினில், ரகசிய எண்ணை நாம் பதிவு செய்யும் போது, நமக்கு பின்நாள் நின்று யாரேனும் கவனிக்கலாம். கார்டு விபரங்கள் மற்றும் ரகசிய எண் கிடைத்தபின், அதை பயன்படுத்தி, யார் வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று
கூறினார்.

Related Topics : National New

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here