மோடிக்கு இனி கஷ்டகாலம்! பிரபல ஜோதிடர் கணிப்பு!

0
0

பிரதமர் மோடிக்கு கஷ்டகாலம் தொடங்கிவிட்டது என்று பிரபல ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் உள்ளது ஹாசனாம்பாள் கோவில்.

இக்கோவில் வருடத்துக்கு ஒரு முறை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

இன்று ஹாசனாம்பா கோவிலில் நடை திறக்கப்பட்டது.   அலங்காரம், சிறப்பு வேலைகள் செய்யப்பட்டு நாளை முதல் 9நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

இக்கோவிலின் தலைமை பூஜாரி நரேந்திர பாபு ஷர்மா அளித்துள்ள பேட்டி:

பிரதமர் நரேந்திர மோடிக்கு கஷ்டகாலம் தொடங்கியுள்ளது.  அவர் பரிகாரம் செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

கர்நாடக முதலமைச்சருக்கு நேரம் சரியில்லை. அவரது அமைச்சரவையில் உள்ளவர்களே அவருக்கு எதிராக மாறுவார்கள்.

முன்னாள் முதல்வர் குமாரசாமி கர்நாடக தேர்தலில் கிங் மேக்கராக வருங்காலத்தில் இருப்பார். எதிர்காலத்தில் அவருக்கு ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சுவார்.

வடகர்நாடக மக்களும் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.  இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here