புதுச்சேரியில் மீண்டும் ஐக்கியம்..! ஓடிய எம்.எல்.ஏ.,க்கள் திரும்பிய புதிர்..!?

0
0

புதுச்சேரி ரிசார்ட்டில் இருந்து ஒவ்வொருவராக காலி செய்து சென்றதால் தினகரன் அதிர்ச்சியில் இருந்தார்.இந்நிலையில் அவர்கள் அனைவரும், இரவோடு இரவாக ஓடோடி வந்து மீண்டும் ஐக்கியமானார்கள்.

‘நாங்கள் யாரும் ஓட்டம் பிடிக்கவில்லை, எதிரணிக்கு தாவி விடவும் இல்லை’ என்று அவர்களாகவே முன்வந்து தெரிவித்துள்ளனர்.

என்ன மாயமோ, தெரியவில்லை. என்ன நடந்ததோ தெரியவில்லை. எம்.எல்.எ.,க்கள் அவர்களாகவே போய் சேர்ந்துகொண்டனர் என்று எதிரணி புழுங்கி கிடக்கின்றனர்.


தினகரன் அணி, எம்.எல்.ஏ.,க்கள், 20 பேர் புதுச்சேரி,சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்திருந்தனர். ஆனால், அவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை.

அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீது, சபாநாயகரிடம் இருந்து நோட்டீஸ் தான் வந்து சேர்ந்தது. இதனால், பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து புதுச்சேரியில் தங்கியிருந்த பல எம்.எல்.ஏ.,க்கள் விடுதியை காலி செய்திவிட்டு பறந்தனர்.

தினகரன் நேரடியாக பேசியும் கூட பல்வேறு காரணங்களை கூறிவிட்டு எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரி விடுதியில் இருந்து, ‘எஸ்கேப்’ ஆனார்கள்.

புதுச்சேரியில் தங்கியிருந்த, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, ஐந்தாக குறைந்து போனது. ‘ஊருக்கு சென்றவர்கள், திரும்ப வாய்ப்பே இல்லை என்ற நிலையில் சென்னையில் முதல்வர் கூட்டும், எம்.எல்.ஏ.,க் கள் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு அதிகம்’ என்று செய்தி பரவியது.

இதனால், அதிர்ந்துபோன தினகரன் தரப்பினர் ஊர் திரும்பியவர்களை மீண்டும் புதுச்சேரி அழைத்து வர தீவிரமாக இறங்கினர்.

அவர்களது முயற்சியின் பலனாக, ஓடிச்சென்ற அத்தனை, எம்.எல்.ஏ.,க்களும் நேற்று முன் தினம் இரவோடு, இரவாக, புதுச்சேரி சொகுசு விடுதிக்கு ஓடோடி வந்துவிட்டனர்.

புதுச்சேரி பக்கமே வராமல் இருந்த வெற்றிவேல், எம்.எல்.ஏ.,கூட நேற்று சொகுசு விடுதிக்கு வந்து சேர்ந்து விட்டார். என்ன நடந்தது என்று ரகசிய விசாரணை செய்ததில் ‘அவர்களுக்கு தேவையானது’ செய்யப்பட்டுள்ளதாம். அதனால், உடனே கிளம்பிவிட்டார்கள் என்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று காலை, எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர், எம்.எல்.ஏ.,வெற்றிவேல் தலைமையில் எல்லா எம்.எல்.எ.,க்களும் பத்திரிகையாளர்களை சந்தித்து, ‘நாங்கள் யாரும் ஓடிவிடவில்லை.எதிரணிக்கு தாவி விடவும் இல்லை’ என்று அவர்களாகவே வாக்குமூலம் அளித்தனர்.

புதுச்சேரியில், 15 நாட்களாக தங்கியிருந்த அவர்களை, நிருபர்கள் தேடிச் சென்று பேசினாலும், பதில் கூறாமல் திருப்பிக்கொண்டு சென்ற அவர்கள், நேற்று அவர்களாகவே முன்வந்து பேட்டி கொடுத்தது புரியாத புதிராகவே உள்ளது
என்கிறார்கள் செய்தியாளர்கள்.

Related Topics : Tamilnadu News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here