பஞ்சத்தை போக்கிய பழம்! பரிதாப நிலையில் உள்ளது!!

அரச கனி என்றும், முக்கனிகளில் 2வது கனியாகவும் புகழ்பெற்றது பலாப்பழம்.

இந்தியா  இப்பழத்தின் தாய்வீடு.   இங்கிருந்து ஆசிய நாடுகள், தூர கிழக்கு நாடுகளுக்கு இப்பழத்தின் விதைகள் எடுத்துச்செல்லப்பட்டு வளர்க்கப்பட்டன.

ஆசிய நாடுகளில் பஞ்சம் ஏற்பட்டபோதேல்லாம் மக்களையும், கால்நடைகளையும் இப்பழம்தான் காப்பாற்றியுள்ளது.

ஒரு பலா மரம் சராசரியாக 100 பழங்கள் தரும்.  ஒவ்வொரு பழத்திலும் 100 சுளைகள் இருக்கும்.   ஒருவர் 10 சுளைகள் சாப்பிட்டால் இரு நேரம் சாப்பிடத்தேவையில்லை.

புரோட்டின்,பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது இப்பழம்.  இப்பழத்தை சுற்றி காணப்படும் நார்ப்பொருளில் இருந்து தற்போது மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

 

பலாப்பழங்களை அப்படியே சாப்பிடாமல் தேன், இனிப்பு பாகு ஆகியவற்றுடன் சேர்ந்து சாப்பிடலாம். அது உடலுக்கு கூடுதல் ஆரோக்கியம் தரும். செரிமானத்தையும் அதிகரிக்கும்.

இச்சிறப்புமிக்க பழம் பங்களாதேஷ் அரசின் தேசிய பழமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பலாப்பழம் கோடைகாலத்தின் முடிவில் அறுவடை செய்யப்படுகிறது.  ஆனால் 80சதவீத பழங்கள்  வீணடிக்கப்படுகின்றன.

இந்தியாவில் 4லட்சம் பலா மரங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இம்மரங்கள் ஒவ்வொன்றில் இருந்தும் ஆண்டுக்கு 5ஆயிரம் மதிப்பு பொருட்கள் பெற முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மத்திய உணவு ஆராய்ச்சிக்கழகம் பலாப்பழத்தில் இருந்து மதிப்புமிகு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கிறது.

இதுகுறித்து தொழில்முனைவோரிடம் தற்போதுதான் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.                      வாழைக்கு அடுத்தபடியாக பலாமரம் முழுவதையும் உபயோகிக்கலாம்.                                                          பலா இலைகளில் இருந்து கால்நடை தீவனங்கள் தயாரிக்கலாம்.   அவற்றின் பாலில் இருந்து ஒட்டுப்பசை உற்பத்தி செய்யலாம்.  உடனடி உணவுகள், உரம், பலாமர பலகைகள் என்று பலாமரம் நமக்கு பயன் தரும்.

பலாவின் மகிமையை தெரிந்துகொண்டு பலாவை பயன்படுத்தி பலனும், பலமும் பெற முடியும்.

 

About the author

Related

JOIN THE DISCUSSION