அறிவியல் ஆசிரியையிடம் கணக்கு கேள்வி..! அமைச்சரின் விதண்டாவாதம்..! வீடியோ..!

0
3

பள்ளி வகுப்பில் அறிவியல் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியையிடம் கணக்கில் கேள்வி கேட்டு விடையை தவறு என்று கூறி ஆசிரியையை அமைச்சர் எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில், திரிவேந்திரசிங் ராவத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கல்வி அமைச்சராக அரவிந்த் பாண்டே என்பவர் பதவியில் உள்ளார்.

அவர் பள்ளிகளுக்கு திடீர் விசிட் செய்து ஆய்வு நடத்துவார். அப்படியே தலைநகர்
டேராடூனில் உள்ள பெண்கள் பள்ளிக்கு, அமைச்சர் பாண்டே போனார். அப்போது, ஒரு வகுப்பில், ஆசிரியை ஒருவர் மாணவிகளுக்கு அறிவியல் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

வகுப்புக்குள் நுழைந்த அமைச்சர், ஆசிரியையிடம், ‘(-) + (-) = ?’ என்று கேட்டார். அதற்கு ஆசிரியை, ‘(-)’ என்று சரியான பதிலை கூறினார். ஆனால், ஆசிரியை கூறிய பதில் தவறு’ என்று கூறிய அமைச்சர், ‘(+)’என்பது தான் சரியான விடை என்றார்.

மேலும், ‘நானும் அறிவியல் படித்திருக்கிறேன். கணித பாடத்தில் தான் ‘(-) + (-)’ = (+) ; ஆனால், அறிவியலில், ‘(-)’ என்பதுதான் சரியான விடை.’ என்று கூறினார்.

அத்துடன் வகுப்பறையை விட்டு போகும் முன்னர், ‘நீங்கள் பெண் என்பதால் விட்டு விடுகிறேன்.இல்லையென்றால் நடவடிக்கை பாய்ந்து இருக்கும்.’ என்று கூறிச் சென்றார்.

அமைச்சர் வகுப்பறையில் பேசிய, வீடியோ சமூக வளை தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலர் அமைச்சரை கழுவி ஊற்றத் தொடங்கினர்.


இதுகுறித்து அறிந்த கல்வி அமைச்சர் பாண்டே, ‘ஆசிரியர்களை அவமதிப்பதற்காக நன் அப்படி செய்யவில்லை. அந்த வகுப்பில், ஆசிரியை கையிலும், மாணவிகள் கையிலும் புத்தகமே வைத்திருக்கவில்லை.

அறிவியல் பாடத்தின் ‘கைடு’ மட்டுமே கையில் இருந்தது. அதை வைத்துத்தான் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அதனால் தான் நான் அவ்வாறு ஒரு கேள்வி கேட்க நேர்ந்தது.

அப்படி நான் கூறிய பதில் தவறு என்று யாராவது நிரூபித்தால், அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்யக் கூட தயாராக உள்ளேன் என்றார்.

 

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here