பன்னீர்செல்வத்துடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு..!

0
0

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி ஆகியோர் இன்று நேரில் சந்தித்து பேசினார்கள். அணிகள்  இணைப்பு குறித்து பேசப்பஅட்டு வரும் சூழலில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிரிந்தது. ஓ.பன்னீர்செல்வம் அணியினரை இணைக்கும்  முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் தினகரன் அணியினரை ஓரங்கட்டும்  நடவடிக்கையும் பழனிசாமி அணியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அணியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இரண்டு கோரிக்கைகள் வைத்திருந்தனர். அதில், ஜெயலலிதா  மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பது பன்னீர்செல்வம் அணியின் கோரிக்கையாகும்.

 


இந்தக் கோரிக்கைகளை முதல்வர் பழனிசாமி அணி நேற்று நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதை வரவேற்றுள்ள பன்னீர்செல்வம் அணியினர், பழனிசாமி அணியுடன் இணைவது குறித்து இன்று மாலை முக்கிய முடிவு எடுக்க உள்ளனர்.
இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் இன்று சென்னை போரூரில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனையில் சந்தித்து பேசியதாக தெரிய வந்துள்ளது.

பன்னீர்செல்வத்தின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க அமைச்சர்கள் வந்ததாகக்  கூறப்படுகிறது. அணிகள் இணைப்பு குறித்து பேசப்படும் நிலையில் அமைச்சர்கள் இரண்டுபேர் பன்னீர்செல்வத்தைச் சந்தித்து
பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Related Topics: Tamilnadu News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here