‘வந்தே மாதரம்’ பாடத்தெரியாத அமைச்சர் தப்பி ஓட்டம்..!

தமிழக கல்வி பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே பெரும்பாலான மாநிலங்களில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல உத்தரப்பிரதேசத்திலும், சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என்று அங்குள்ள இஸ்லாமியப் பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ள ஆதித்யநாத் அரசு, அப்போது வந்தே மாதரமும் பாட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

 

அவ்வாறு நடத்தப்பட்ட  நிகழ்ச்சிகளை வீடியோ படம் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.இப்படி வந்தே மாதரத்தைக் கட்டாயமாக்க நினைக்கும் பா.ஜ.,வின் அமைச்சர் ஒருவரே, வந்தே மாதரம் பாடாமல் தப்பி ஓடிய சம்பவம்  சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சிறுபான்மைதுறை நல அமைச்சராக இருப்பவர் பல்தேவ் சிங் ஆலுக். இவர்  அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

 

வந்தே மாதரம் கட்டாயமாக்கப்படுவது குறித்த அந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அமைச்சரை வந்தே மாதரம் பாடும்படி  கூறியுள்ளனர்.

ஆனால், அமைச்சரோ வந்தே மாதரத்தில் ஒரு வரி கூட பாடவில்லையாம். மாறாக, “வந்தே மாதரத்தை நாட்டில் உள்ள  அனைவருமே பாட வேண்டும்” என்று கூறி பேச்சை மாற்றிவிட்டு எஸ்கேப் ஆனாராம்.

Related Topics : National News

About the author

Related

JOIN THE DISCUSSION