தீவிரவாதிகளுடன் மோதல்.., தமிழக வீரர் வீரமரணம்

ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நடந்தது.

இதில் தமிழக வீரர் இளையராஜா வீரமரணம் அடைந்தார்.
ஜம்முவில் ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில்                                   3 தீவிரவாதிகளும், 2 ராணுவ வீரர்களும் இறந்தனர்.

ஜம்முகாஷ்மீர் ,சோபியான் மாவட்டம் அவ்நீராவில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

அப்பகுதியில் நேற்று இரவு தேடுதல் பணியில் ஈடுபட்டனர், அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கிச் சுட்டனர்.

பதிலுக்குப் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை சுற்றிவளைத்து சுட்டதில் 3 தீவிரவாதிகள் பலியானார்.

தீவிரவாதிகள் சுட்டதில் பாதுகாப்பு படையினர் 2 வீரர்கள் மரணமடைந்தனர் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.

வீரமரணம் அடைந்த தமிழக வீரர் இளையராஜா.  இவர் சிவகங்கை மாவட்டம், கண்டனி ராமத்தைச் சேர்ந்தவர்.

ராணுவ வீரர் இளையராஜா உடலை  டெல்லி கொண்டுவந்து ராணுவ மரியாதைகள் செய்த பிறகு தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

About the author

Related

JOIN THE DISCUSSION