2019 உலக கோப்பை போட்டியில் பங்கேற்க தோனிக்கு தகுதி உள்ளது..! மைக்கேல் ஹஸ்ஸி சொல்கிறார்..!

2019ம் ஆண்டில் நடக்க உள்ள ஐசிசி உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க தோனிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது என்று  மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் ஹஸ்ஸி ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக  விளையாடியவர். சூதாட்ட புகாரால் சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டது. இரண்டாண்டு தடைக்கு பின்னர் சென்னை அணி  அடுத்த ஆண்டு போட்டிகளில் விளையாட உள்ளது.

2019ம் ஆண்டில் நடக்க உள்ள உலக கோப்பை போட்டிகள் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான மைக்கேல் ஹஸ்ஸி  கூறுகையில், சென்னை அணி வீரர்கள் வெவ்வேறு அணிகளுக்கு சென்று விட்ட நிலையில் அணியை மீண்டும் கட்டி எழுப்புவது  சவாலானது தான்.

ஆனால், சென்னை அணி மீண்டும் எழுச்சி பெறும். அந்த அணியின் பயிற்சியாளர் பதவி கிடைத்தால் மகிழ்ச்சியாக ஏற்பேன் என கூறியுள்ளார்.

மேலும், தோனியுடன் தனக்கு நல்ல நட்பு இருப்பதாக கூறிய ஹஸ்ஸி, அடுத்த உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க தோனிக்கு  அனைத்து தகுதிகளும் உள்ளது. அவர் நிச்சயம் 2019 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்பார் என்று கூறினார்.

Related Topics : Sports News

 

About the author

Related

JOIN THE DISCUSSION