எம்.ஜி.ஆர்.,நூற்றாண்டு விழாவில் நாற்காலி சண்டை..! இது பல்லடம் பரபரப்பு..!

0
2

நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எம்.ஜி.ஆர்.,நூற்றாண்டு விழா நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால் உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

 

அப்போது, விழா தொடங்குவதற்கு முன்னர் விழா மேடையில் முதல்வரும், சபாநாயகரும் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்போது, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சபாநாயகரின் அருகில் இருந்த நாற்காலியில் சென்று அமர முற்பட்டார்.

அதைப்பார்த்து கோபத்துடன் சென்ற அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகரை இழுத்து பின்னால் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் போய் உட்காருமாறு அவரை கையை பிடித்து இழுத்து கிளப்பிவிட்டார்.

ஆனால், துணை சபாநாயகர், ‘ நான் ஏன் போக வேண்டும் என்று நாற்காலியில் இருந்து எழுந்திரிக்காமல் இருந்தார். அடுத்த சில வினாடிகளில் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்தது. அப்போது, இதை கவனித்த முதல்வர் பழனிசாமி சுதாரித்துக்கொண்டு, இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தார்.

 

அருகில் இருந்த அமைச்சர்கள் தங்கமணியும், செங்கோட்டையனும் உடுமலை ராதாகிருஷ்ணனை இழுத்து வேறு ஒரு நாற்காலியில் உட்கார வைத்தார்கள். எஸ்.பி. வேலுமணியும், தனியரசுவும் பொள்ளாச்சி ஜெயராமனை அமைதிப்படுத்தினார்கள்.

 

‘ஏற்கனவே கட்சி அந்தரத்தில் தொங்கிட்டு இருக்குது. இதுல நாக்காலி சண்டை வேற’ என்று அமைச்சர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். இதனால், மேடையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Topics : Tamilnadu News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here