அமெரிக்காவிலும் ஒரு நெடுவாசல் போராட்டம்..! மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு..!

0
0

ஒரு விவசாயி தனக்காக மாட்டும் இல்லாமல் இந்த நாட்டுக்காகவும் உணவு உற்பத்தியில் ஈடுபடுகிறான். அந்த விவசாயியை காப்பாற்றவேண்டியது ஒரு அரசின் கடமை.

வளர்ச்சி வேண்டும் என்பதற்காக விவசாயத்தை அழித்துவிட முடியாது. அறிவியல் வளர்ச்சித் திட்டங்களில், பெரும்பாலானவை நம் சுற்றுச் சூழலுக்கு எமனாகவே உள்ளது.

இந்த சூழலை அழித்துவிட்டு மனிதர்களாகிய நாம் எங்கு போய் வாழப்போகிறோம்? இப்படியான குரல்கள் தமிழத்தின் நெடுவாசலில் மட்டுமல்ல.அமெரிக்காவிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

ஜிம் கார்ல்சன் ஒரு விவசாயி. அவரது நிலத்தில் அவர் சோளம் மற்றும் சோயா போன்றவைகளை சாகுபடி செய்கிறார். இந்நிலையில், தற்போது அவரது நிலம் வழியாக எரிவாயு கொண்டு செல்ல குழாய்கள் பதிக்க உள்ளார்கள். அந்த குழாய்களுக்கு எந்த பதிப்பு வந்தாலும் அதற்கு அவர் தான் பொறுப்பாம்.

ஒபாமா அதிபராக இருந்தபோது அந்த திட்டத்திற்கு அவர் அனுமதி அளிக்கவில்லை. கீஸ்டோன் எக்ஸ்.எல் திட்டம் என்று அளிக்கப்படும் அந்த திட்டம் தற்போதைய அதிபர் டிரம்ப் அனுமதி அளித்துள்ளார்.

2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட டகோடா அணுகல் எரிவாயுக் குழாய்த் திட்டம் கடந்த ஆண்டு முடிக்கப்பட்டது. அத்திட்டம் முடிக்கப்பட்டு எண்ணெய் செலுத்தப்பட்டது. அப்போது அந்த குழாய்கள் வழியாக இரண்டு இடங்களில் சுமார் 350 லிட்டர் எண்ணெய் கசிந்து வெளியேறியது. அப்போதே அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் கீஸ்டோன் எக்ஸ்.எல் திட்டத்திற்கு டிரம்ப் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஹார்டெஸ்டி நகரத்தில் இருந்து கனடாவிற்கு 1,179 மைலுக்குக் குழாய்கள் பதிக்கப்படும். இத்திட்டத்தை 2015-ம் ஆண்டு பாரீசில் பருவநிலை குறித்த மாநாட்டு அமர்வில் வேண்டாம் என்றனர்.

தற்போது, இந்த திட்டத்திற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வளர்ந்த நாடுகளிலேயே இந்த திட்டம் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் போராடுவது நியாயமானது தானே?

Related Topics : International News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here